எதிர்பார்க்கப்பட்ட நவகொவிய சேவைகள் எதிர்காலத்தில்
-
ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில். விவசாயம் மீதான அடிப்படை அறிவினைப் பரிமாறுதல், (உள்ளுர் மற்றும் உலகளாவிய முறையில் கிடைக்கக்கூடிய வகையில்) சமூகத்தின் எந்த உறுப்பினரிடமும் அவர்களின் தொழில்வாண்மை மட்டங்களைப் பொருட்படுத்தாது, விவசாய அடிப்படையிலான அனுபவத்தைப் பகிரும் சபை. பல்வேறு நெறிகளில் விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைக் கலந்துரையாடுதல் விவசாயம் தொடர்பான மற்றும் விருப்புடைய குழுக்களிடையே நெருக்க உறவுகளை உருவாக்குதல், தொடர்ச்சியான கூட்டங்கள், விவாதங்கள், கலந்துரையாடல்கள்> இணக்கங்களுக்கான ஒரு மேடையமைத்தல், தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கலுக்கு உள்ளீடுகளை வழங்குதல்.
- மனுசகம கருத்திட்டச் (CIC RUHUSEF) செயற்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்படும், உள்ளுர் கிராமங்களிடையே, தகவல் தொழில்நுட்ப வலைப்பின்னலை சென்றடையச் செய்தல்.
- விவசாயம் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்களை இற்றைப்படுத்தல்களுடன் விருத்தி செய்தல். விவசாய முடிவு மேற்கொள்ளைகளுக்கு ஆதரவளித்தல்.
- விவசாயக் கற்கை நெறிகளிலிருந்து ஒரு சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கற்றல் முகாமைத்துவ முறைமையை விருத்தி செய்தல், விவசாய சொல் அகராதியை விருத்தி செய்தல், விவசாயம் தொடர்பான இணைப்புடைய இணையத்தளங்களைக் கண்டுபிடித்தல், ஆய்வுப்பத்திரிகைகள் மற்றும் விவசாயப் பரிசோதனைத் தகவல்களை அறியக்கூடியதாக்குதல்.
|
|
|
வியாழக்கிழமை, 14 ஜூன் 2012 12:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |