"Nava Goviya" “நவகொவிய” என்பது நவீன விவசாய அறிவையும், தொழில்நுட்பங்களையும், அனுபவங்களையும் விவசாயத்தின் பல்வேறு கிளைகளிடையேயும், சம்பந்தப்பட்ட ஆட்களிடையேயும், உலகளாவிய ரீதியில், எந்தக் குழுமத்தினரிடையேயும், ஆங்கில, சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் இலத்திரனியல் ரீதியில் வடிவமைக்கப்பட்ட எண்மமுறை மேடைகளில் பகிர்ந்து கொள்ளும் ஒரு இணையத்தளமாகும்.

CIC விவசாய வர்த்தகத்தின் CSR பிரிவாகிய CIC RUHUSEF ஆனது விவசாய தொழில்வாண்மையாளர்கள், மற்றும் இணையத் தீர்வு வழங்குபவர்கள் போன்ற பல்பங்காண்மை பங்காளிகளுடன் இணைந்து, தகவல் தொழில்நுட்பத்தை பெற்று பயன்படுத்தவும், விவசாயத்தை ஒரு நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு ஆரோக்கிய வியாபாரமாகவும் மாற்றக்கூடிய, பொதுமக்களுக்கு போசாக்கையும் ஆரோக்கியத்தையும் அளிக்கக்கூடிய, புதிய இன விவசாயிகளை விருத்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றது.

ஏனைய RUHUSEF கருத்திட்ட செயற்பாடுகள் ஊடாக உருவாக்கப்பட்ட கிராமிய சனசமூகங்களின் E சமூகங்களானவை, தகவல் தொழில்நுட்ப இடைவெளியை உடைப்பதற்கான அத்திபாரத்தையும், பலத்தையும் உள்ளுர் கிராமிய விவசாயிகள் வலைப்பின்னலுக்கு வழங்கும்.

Ruhusef கருத்திட்ட செயற்பாடுகளினால் விவசாய தொழில்வாண்மையாளர்களுக்கிடையிலான, விவசாயி, வியாபாரி வலைப்பின்னல்களுக்கிடையிலான, இணைப்புக்களும், உறவுகளும், சமூக இடைவெளிகளை வெற்றிகாண்பதற்கும், நவகொவிய இணையத்தளத்தின் துடிப்பான பயன்பாட்டிற்கும் ஆதரவளிக்கும்.

எதிர்பார்க்கப்பட்ட நவகொவிய சேவைகள் எதிர்காலத்தில்

  • ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில். விவசாயம் மீதான அடிப்படை அறிவினைப் பரிமாறுதல், (உள்ளுர் மற்றும் உலகளாவிய முறையில் கிடைக்கக்கூடிய வகையில்) சமூகத்தின் எந்த உறுப்பினரிடமும் அவர்களின் தொழில்வாண்மை மட்டங்களைப் பொருட்படுத்தாது, விவசாய அடிப்படையிலான அனுபவத்தைப் பகிரும் சபை. பல்வேறு நெறிகளில் விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைக் கலந்துரையாடுதல் விவசாயம் தொடர்பான மற்றும் விருப்புடைய குழுக்களிடையே நெருக்க உறவுகளை உருவாக்குதல், தொடர்ச்சியான கூட்டங்கள், விவாதங்கள், கலந்துரையாடல்கள்> இணக்கங்களுக்கான ஒரு மேடையமைத்தல், தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கலுக்கு உள்ளீடுகளை வழங்குதல்.

  • மனுசகம கருத்திட்டச் (CIC RUHUSEF) செயற்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்படும், உள்ளுர் கிராமங்களிடையே, தகவல் தொழில்நுட்ப வலைப்பின்னலை சென்றடையச் செய்தல்.
  • விவசாயம் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்களை இற்றைப்படுத்தல்களுடன் விருத்தி செய்தல். விவசாய முடிவு மேற்கொள்ளைகளுக்கு ஆதரவளித்தல்.
  • விவசாயக் கற்கை நெறிகளிலிருந்து ஒரு சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கற்றல் முகாமைத்துவ முறைமையை விருத்தி செய்தல், விவசாய சொல் அகராதியை விருத்தி செய்தல், விவசாயம் தொடர்பான இணைப்புடைய இணையத்தளங்களைக் கண்டுபிடித்தல், ஆய்வுப்பத்திரிகைகள் மற்றும் விவசாயப் பரிசோதனைத் தகவல்களை அறியக்கூடியதாக்குதல்.